2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (25.01.2015 – 31.01.2015)

A.P.Mathan   / 2015 ஜனவரி 25 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (25.01.2015 – 31.01.2015)

மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

எதையும் தாங்கும் மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் சமூகத்தில் நற்பெயரை பாதுகாப்பதில் கூடுதல் முயற்சி தேவைப்படும். ஆடம்பர செலவு தவிர்ப்பதால் சேமிப்பு குறையாமல் இருக்கும். நீண்டபயணங்களினால் சோர்வு காணப்படும். சீரான ஓய்வு அவசியம். குழந்தைகள் தங்களது திறமையை வளர்த்திடும் லட்சியங்களுடன் செயல்படுவர். நீங்கள் பொது விவகாரங்களில் கருத்து சொல்ல வேண்டாம். இல்லறத்துணை கூடுதல் அன்பு பாசத்துடன் உதவுவார். தொழிலில் சில மாற்றங்கள் செய்து உற்பத்தி விற்பனை அளவை சரிசெய்வீர்கள். குடும்ப நலன் சிறக்க இஷ்ட தெய்வ வழிபாடு மேற்கொள்வீர்கள். 

அதிர்ஷ்ட திகதி : 31
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம் : நவகிரகம்

 

இடபம் 
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

விடா முயற்ச்சியால் முதலிடம் பிடிக்கும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் பேச்சில் ஆதாய நோக்கம் இருக்கும். புதிய வாகனம் வீடு வாங்க நல்யோகம் உண்டு. குழந்தைகளின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். பழைய கடன்களில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். அரசு துறை சார்ந்தவர்களிடம் இதமான அணுகுமுறையைப் பின்பற்றவும். தொழிலில் உற்பத்தி மற்றும் விற்பனை கூடும். பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும். பெண்கள் தாய்வீட்டு உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் மாறும். உங்களின் நலன் சிறக்க பலர் உதவி புரிவார்கள். 

அதிர்ஷ்ட திகதி : 30
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்

 

மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

படிப்பறிவுடன் பட்டறிவும் உள்ள மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளால் அலைச்சல் செலவுகள் வந்து போகும். பூர்வீக சொத்து பாராமரிப்பு செலவுகள் அதிகமாகும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். சிலருக்கு புதிய வேலைகள் அமையும். பெண்களின் கோபம் குறையும். பெற்றோரின் அறிவுரையை ஏற்றுக்கொள்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். வளைந்து கொடுத்து வெற்றி காண வேண்டிய வாரம் இது. 

அதிர்ஷ்ட திகதி : 31
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்  
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

 

கடகம் 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

நீதி, நேர்மை, மன உறுதியை பின்பற்றும் கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுடைய நிர்வாகத்திறன் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொத்துக்களை வாங்க வழி கிடைக்கும். பிள்ளைகளை அரவணைத்துப் போவது நல்லது.  அரசு காரியங்கள் தாமதமாக முடியும்.  தடை பட்ட காரியங்கள் வெற்றி அடைய கூடும் . குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும்.வரவக்கு ஏற்ற செலவு உண்டாகும்.எதிர்பார்புகள் தடையின்றி நிறைவேறும் சில யதார்த்தமான முடிவுகளால் வெற்றி பெறும் வாரம் இது. 

அதிர்ஷ்ட திகதி : 27
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி 

 

சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

பேரும் புகழும் கூடுதல் பண வரவும் விரும்பும் சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். அழகு, ஆரோக்கியம் கூடும். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக இருப்பது அவசியமாகும். இடையிடையே பொருட்கள் வாங்குவது விற்பதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வீட்டில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கடன் உதவிகள் கிடைக்கப்பெற்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்க வேண்டி இருக்கும். 

அதிர்ஷ்ட திகதி : 29 
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல் 
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)

 

கன்னி 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தன்னை சார்ந்தவர்களுக்கு இயன்ற அளவில் உதவும் கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்கள்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்கள் வரும். ஏற்றுமதி இறக்குமதி களில் ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.  குறித்த நேரத்திற்கு பணிகளை முடித்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் வருகை உண்டாகும். புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். ஆனாலும் வார இறுதியில் குடும்பத்தில் சில சலசலப்புகள் காணப்படும்.   வேண்டாத பேச்சுக்கள் மற்றும் செலவுகளால் மனம் வேதனையடைதல் மற்றும்  உடல் நிலையில் பாதிப்புக்கள் போன்றவை உண்டாகும்;. எனவே இந்த வாரம் உங்களுக்கு இரண்டும் கலந்த பலன்களே காணப்படுகின்றன.

அதிர்ஷ்ட திகதி : 25
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா

 

துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

பழகுபவர்களிடம் சூழ்நிலை உணர்ந்து நடக்கும் துலா ராசி அன்பர்களே..!

இந்தவாரம் செலவுகளில் சிக்கனமாக இருப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். மக்கள்  மத்தியில் செல்வாக்கைப் பெறுவீர்கள். அரசுப்பணிக்காக காத்திருப்பவர்களுக்கு வேலைகள் கிடைக்கும்.  எதிர்பாரத திடீர் செலவுகள் காணப்படும்.  நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி  சுமூக உறவு காணப்படும்.  பணம் தேவைக்கேற்ப வரும். இ;டம் மாற்றம் முயற்சிகள் வெற்றியைத் தரும். ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும். 

அதிர்ஷ்ட திகதி : 29 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)

 

விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

பிறர் சொல்லும் புகழ்ச்சி, இகழ்ச்சியின் நோக்கம் உணர்ந்து செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே..!

இந்த வாரம் பொருளாதார வளம் சிறந்து காணப்படும். குழந்தைகள் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். பெறறோர்களின் உடல் நலம் சிறந்து காணப்படும். தொழிலில் பணியாளர்களிடம் இலகுவாக பணி நிறைவேற்றுவது அவசியமாகும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போவது நன்மை தரும். உறவினர்கள் மூலம் வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அரசாங்க விஷயங்கள் தங்களுக்கு ஆதரவாகவே முடியும். வார இறுதியில் வண்டி வாகன வகையில் செலவுகள் அதிகரிக்கும். உடல் சோர்வுகள் காணப்படும். 

அதிர்ஷ்ட திகதி : 28 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)

 

தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

சோதனைகளையும் சாதனைகளாக்கும் தனுசு ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையில் சில காரியங்கள் நடைபெறலாம். கவனமுடன் செயல்படவும். வீடு மற்றும் வாகனங்களில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு இடம் தர வேண்டாம். குழந்தைகள் பயன்படுத்தும் விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டும். சத்து நிறைந்த உணவு மற்றும் சீரான ஓய்வு உடல் நலம் பாதுகாக்க பயன்படும். தொழிலில் உருவாகும் இடையூரை தாமதமின்றி சரி செய்யவும் பணியாளர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவது நற்பலன் தரும்.  நண்பர்களிடத்தில் சுமூகமான போக்கை கடைபிடிப்ப நன்மையைத் தரும். 

அதிர்ஷ்ட திகதி : 30 
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்

 

மகரம் 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அன்பு நிறைந்த செயல்களால் பிறர் மனம் கவரும் மகர ராசி அன்பர்களே..!

இந்த வாரம்  பணிகளை நிறைவேற்ற உதவும் சூட்சுமங்களை உணர்ந்து செயல்படுவீர்கள். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும். தாய்வழி உறவினர் செயல்களை விமர்சிக்காமல் இருப்பது நல்லது. மகளின் யோக பலம் முழு அளவில் துணை நிற்கும். தொழில் வியாபாரத்தில் லாப விகிதம் கூடும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். வீட்டை அலங்கரிப்பதில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். குழந்தைகளை தங்களின் அனுமதியின்றி வெளியிடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம். 

அதிர்ஷ்ட திகதி : 30
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான் 

 

கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் மிகுந்த கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் காணப்படும். முக்கிய பணிக்காக தங்கள் சேமிப்புகள் குறையும். முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். சிலரின் பேச்சுக்கள் எரிச்சலைக் கொடுக்கும். தவிர்க்க  முடியாத சில பயணங்கள் உண்டாகும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.  வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக இடமுண்டு. அதிக அலைச்சலால் உடல் நிலையில் சோர்வு உண்டாகும்.  இந்த வாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 31 
அதிர்ஷ்ட நிறம் : கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம் : பிரம்மா

 

மீனம் 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

எதிர்வரும் சூழ்நிலை உணர்ந்து சமயோசிதமாக செயல்படும் மீன ராசி அன்பர்களே..!
   
இந்த வாரம் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். போட்டி பொறாமைகளை சந்தித்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கணவன் மனைவி  உறவு  சுமூகமாக செல்லும்.   வேலைக்கு செல்பவர்கள்  முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது.  வெளியில் செல்லும் போது கவனத்துடன் இருப்பது அவசியம்.  இந்த வாரம் உங்களுக்கு இரண்டும் கலந்த பலன்களே காணப்படுகின்றன. 

அதிர்ஷ்ட திகதி : 27 
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .