2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

அக்கரைப்பற்று புகைப்படத் திருவிழா

Editorial   / 2019 ஜனவரி 11 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகைப்படத் திருவிழாக் கண்காட்சி, அக்கரைப்பற்று Pebbles Academy கல்வி நிறுவனத்தில், அண்மையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதன்போது, அக்கரைப்பற்றைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 28 புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.   

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய விரிவுரையாளர் கலைஞர் ரமீஸ் அப்துல்லாஹ், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் றிம்சான் ஆகியோர் கலந்து கொண்டனர்.   

நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட பத்து புகைப்படக் கலைஞர்களுக்கு, சிறந்த புகைப்படக் கலைஞர் விருதும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை முறையே அக்கரைப்பற்றைச் சேர்ந்த மொஹம்மட் காசிம் மொஹம்மட் ஆசிக், அப்துல் மஜீத் பாசித் அல்நாசர், அன்வர் மொஹம்மட் அம்ஜத் ஆகியோர் பெற்றுக்கொண்டதோடு, சிறப்பு அங்கிகார விருதை, வைத்தியர் ஆகில் சரீப்டீன் பெற்றுக்கொண்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .