2022 ஜனவரி 22, சனிக்கிழமை

“பூத்தது தமிழ்” கவிதை நூல் வெளியீடு

Editorial   / 2018 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

கவிஞர் சேனையூர் வி.நவரெத்தினராஜா எமுதிய 'பூத்தது தமிழ்' கவிதை நூல் வெளியீட்டு விழா, திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில், நாளை (24) மாலை 4 மணிக்கு, “நீங்களும் எமுதலாம்” ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கத்தின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் கலந்துகொள்ளவுள்ளார்.

ஆசியுரையை சேனையூர் நாகம்மாள் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ அ.அரசரெத்தினமும் வரவேற்புரையை ந.நவஜீவனாவும் வழங்கவுள்ளனர்.

நூல் அறிமுக உரையை அதிபர் கு.ஜனகனும்  நயவுரையை சேனையூர் இரா.இரத்தினசிங்கமும்  வழங்கவுள்ளனர்.

நிகழ்ச்சியை, “பொலி” சஞ்சிகையின் ஆசிரியர் பு.ஜெயாகரன் தொகுத்து வழங்கவுள்ளார்.

நூல் வெளியீட்டு நிகழ்வில், சங்கீத ஆசிரியை திருமதி வி.பத்மராஜினியின் சிறப்பு இசை நிகழ்வு இடம்பெறவுள்ளார். ஏற்புரையை நூலாசிரியர் வழங்குவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X