2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

நாடக விழா

Editorial   / 2019 ஜூலை 12 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
 
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர்பற்று மேற்கு கோட்டத்தின் இன்று (12) நடைபெற்றது.
கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்படும் கோட்டமட்டம், வலய மட்டம், மாகாணமட்டம், தேசியமட்டம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெறும் நாடகங்கள் தெரிவு செய்யப்படவுள்ளன.

மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரனின் ஆலோசனைக்கமைவாக, கோட்டமட்ட நாடக விழா இணைப்பாளர் பு.சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழவில், பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ்,  நாடக துறைசார் நடுவர்கள், பாடசாலை அதிபர்கள் என பலரும்; கலந்துகொண்டனர்.

இதன்போது ஏறாவூர்பற்று மேற்கு கோட்ட பாடசாலை மாணவர்களின் நாடகங்கள் மேடையேற்றப்பட்டதுடன் இதில், கித்தூள் ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலயம் முதலாம் இடத்தையும், பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் 2 ஆம் இடத்தையும், காயான்குடா கண்ணகி வித்தியாலயம் 3ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

கோட்ட மட்டப்போட்டியில், 1 ஆம் இடத்தைப் பெற்ற நாடகம், எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள வலயமட்ட போட்டியில் பங்குபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .