2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

‘சுய தணிக்கையின் அரசியல்’ ஆய்வு நூல் வெளியீடு

Editorial   / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் ஆய்வாளர் யதீந்திராவின் ‘சுயதணிக்கையின் அரசியல்’ ஆய்வு நூல் வெளியீட்டு விழா, திருகோணமலை நகரசபை மண்டபத்தில், சனிக்கிழமை (03) மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.   

சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்,   
பிரதம விருந்தினராக DAN தொலைக்காட்சி குழுமம் தலைவர் எஸ். எஸ். குகநாதன் கலந்துகொள்ளவுள்ளார். 

வரவேற்புரையை திருகோணமலை நகரசபை உறுப்பினர் க.ஜெயபிரகாஷ் வழங்கவுள்ளார். நூல் அறிமுகத்தை கவிஞர் தி. பவித்திரனும், நூல் பற்றிய கருத்துரையை “நீங்களும் எழுதலாம்” ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கமும் சமகால நிலைமைகள் தொடர்பில் கூர்மை செய்தித்தளத்தின் பிரதம ஆசிரியர் அ. நிக்ஸனும் உரையாற்றவுள்ளார்.   

பிரதம விருந்தினர் உரையைத் தொடர்ந்து நூல் ஆசிரியர் ஆ. யதீந்திராவின் நிறைவுரை நடைபெறும்.  
இந்நிகழ்வில், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .