2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

Kogilavani   / 2017 மே 24 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹிக்கடுவ பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள வியாபார நிலையமொன்றில், இன்று (24) மாலை  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில்,  இருவர் உயிரிழந்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில், தொடந்துவ படுவத கல்பொத்த பிரதேசத்தைச் சேர்ந்த சஜின் நிமால் (வயது 30) மற்றும் தொடந்துவ குமாரகந்த பிரதேசத்தைச் சேர்ந்த குஷான் தனுத்தர (வயது 30) ஆகியோரே, உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரையும் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல முற்பட்டபோதிலும் இருவரும் வழயிலேயே உயிரிழந்துவிட்டனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்வதற்காக, சீ.சீ.டி.வியின் உதவியை நாடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .