2021 மே 15, சனிக்கிழமை

தென்னை வளர்ப்பு தொடர்பில் செய்கையாளர்களுக்கு விளக்கம்

Editorial   / 2017 மே 23 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொத்துவில் பிரதேசத்திலுள்ள தென்னைச் செய்கையாளர்களுக்கு தென்னை வளர்ப்பு தொடர்பாக, செய்கை முறையிலான விளக்கமளிக்கும் செயலமர்வொன்று, பொத்துவில் பிரதேசத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. 

தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் நடத்தப்பட்ட குறித்த செயலமர்வில், புத்தளம் பிரதேச தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.ஹிஜாஸ், விசேட வளவாளராகக் கலந்துகொண்டார். 

தற்போது நாட்டில் நிலவும் வரட்சியான வானிலையிலிருந்தும் நோய் மற்றும் பீடைகளிலிருந்தும், தென்னை மரங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாகவும் இதன்போது தென்னைச் செய்கையாளர்களுக்கு செய்கை முறையில் விளக்கமளிக்கப்பட்டது. 

இச்செயலமர்வில், 30க்கும் அதிகமான தென்னைச் செய்கையாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .