2021 ஜூன் 14, திங்கட்கிழமை

நந்தனவுக்கு மறியல் நீடிப்பு

Kogilavani   / 2017 மே 31 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்  

இலங்கைப் போக்குவரத்துச் சபையில் இடம்பெற்ற 125 மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பான குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட உதிரிப்பாக விநியோகஸ்தரான நந்தன பிரியந்தவின் விளக்கமறியலை, ஜூன் 13ஆம் திகதிவரை நீடித்து, இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி, நேற்று (30) உத்தரவிட்டார்.  

2010 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் இ.போ.ச அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய, மூன்று தடவைகளில், முதலாவது சந்தேகநபரினால் போலியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.  

அதற்கமைய, அவ்வாறு வழங்கப்பட்ட போலி ஆவணங்களை ஒப்புதலளித்து, இ.போ.சவின் நிதிப் பிரிவினூடாக பணம் வழங்க 2ஆவது சந்தேக நபரான இ.போ.சவின் முன்னாள் தலைவர் ஷஷி வெலகம உடந்தையாக இருந்துள்ளதாக முறைப்பாட்டாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .