Editorial / 2018 ஒக்டோபர் 05 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலஹா வைத்தியசாலையின் மீது தாக்குதல் நடத்தி, பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட 10 பேரும், எதிர்வரும் 18ஆம் திகதி வரையிலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 10 பேரும், கண்டி நீதவான் முன்னிலையில் நேற்று (04) ஆஜர்படுத்தியபோதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
கலஹா வைத்தியசாலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி காலை அனுமதிக்கப்பட்ட 2 வயதான சங்கர் சஜித் என்றக் குழந்தை, பரிதாபகரமாக உயிரிழந்தது.
அக்குழந்தையின் உயிரிழப்புக்கு வைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்த போக்கே காரணமென, பிரதேசவாசிகள் கடுமையாகக் குற்றஞ்சாட்டி, எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதேவேளை, வைத்தியர்களையும், தாதிமார்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தேடிச்சென்றமையால், அங்கு பதற்றமான நிலைமையொன்று அன்று ஏற்பட்டிருந்தது.
இதேவேளை, இந்த சம்பவங்களையடுத்து, அந்த வைத்தியசாலை இழுத்து மூடப்பட்டது. வைத்தியசாலையில் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தனர் என்றக் குற்றச்சாட்டில், ஆரம்பத்தில 7 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டனர். மேற்படி மூவரையும் ஏற்கெனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 சந்தேகநபர்களையும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago