Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகள், எதிர்வரும் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான உத்தரவை, கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று (26) பிறப்பித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டிகளைத் தன்வசம் வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகளே, இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு, இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, உடுவே தம்மாலோக தேரரின் சட்டத்தரணி சுகயீனமடைந்துள்ளதாக அவரின் கனிஷ்ட சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .