2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

பேர்பெச்சுவல் நிறுவனத்தின் ‘சொத்து விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவு’

Editorial   / 2018 மே 11 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேர்பெச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனம்,தேசிய வருமான வரித் திணைக்களத்துக்குச் சமர்ப்பித்துள்ள வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை, பொலிஸ்மா அதிபருக்கு வழங்குமாறு, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, தேசிய வருமான வரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு, நேற்றைய தினம் (10) உத்தரவிட்டார். 

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய வழக்குக்காக, இவற்றைக் கோரிய சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபருக்குப் பதிலாக முன்னிலையாகியிருந்த அரச சட்டத்தரணி உதார கருணாதிலக்க விடுத்த வேண்டுகோளுக்கமைய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  

மேலும், பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம், டபிள்யூ.எம். மென்டிஸ் நி​றுவனத்துக்கு வழங்கியிருக்கும் நிதி தொடர்பான முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு, மென்டிஸ் நி​றுவனத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு, நீதவான் உத்தரவிட்டார்.  ​அத்துடன், சந்தேகநபர்களை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், நீதவான் உத்தரவிட்டார்.  

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோருக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X