Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 24 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண், கோடரி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
7 மாத கர்ப்பிணியான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர் மீதே இவ்வாறு கோடாரி வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு குழந்தையின் தயான இப்பெண்ணின் வீட்டுக்குள், திருடும் நோக்கோடு இன்று மதியம் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள், கோடாரியால் கொத்தியுள்ளனர்.
இரத்த வெள்ளத்தில் இருந்த பெண்ணைக் கண்ட அயலவர்கள், உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக, பொலிஸார் கூறினர்.
இவர் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதா கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .