Princiya Dixci / 2017 மே 05 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம், மணல்குன்று, செம்மாந்தளுவ பிரதேசத்திலுள்ள குப்பை மேட்டிலிருந்து, மனித மண்டையோடொன்று, புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குப்பை மேட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியொருவர், குப்பை மேட்டிலிருந்த பொலித்தீன் பையொன்றை எடுத்துள்ளார்.
சிறுமியினால் இவ்வாறு எடுக்கப்பட்ட குறித்த பொலித்தின் பைக்குள், பற்கள் நிறைந்த மனித மண்டையோடொன்று இருந்துள்ளதை அவதானித்ததுடன், இதுபற்றி பிரதேச மக்களின் உதவியுடன் புத்தளம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த புத்தளம் பொலிஸார், குறித்த மனித மண்டையோட்டினை மீட்டதுடன், அதுதொடர்பில் விசாரணைகளையும் முன்னெடுத்தனர்.
மனித மண்டையோடானது, ஆணொருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த புத்தளம் பொலிஸார், மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்னர், துண்டிக்கப்பட்ட தலைப்பகுதி இந்தக் குப்பை மேட்டில் வீசப்பட்டிருக்கலாமெனத் தாம் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை, சம்பவ இடத்துக்கு வந்த புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எம்.எம்.இக்பால், பொலீத்தின் பைக்குள் இருந்து மீட்கப்பட்ட மனித மண்டை ஓட்டைப் பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் முன்னெடுத்தார்.
இதன்போது, குறித்த மனித மண்டையோட்டினை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும், அதுதொடர்பான வைத்திய அறிக்கையை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதுதொடர்பில் புத்தளம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 minute ago
25 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
25 minute ago
51 minute ago