Editorial / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாதாரணதர பரீட்சைகள் இன்று (12) நிறைவடைந்த நிலையில், திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றுக்கு அருகில் 18 வயது இளைஞரொருவர் கத்தியுடன் நின்றுகொண்டிருந்த வேளையில், குறித்த இளைஞரை திஸ்ஸமஹாராம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞன் திஸ்ஸமஹாராம தெபரவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் தெரிவித்தனர்.
சாதாரணதர பரீட்சைகள் இன்று நிறைவடைவதன் காரணமாக, பரீட்சைகள் இடம்பெறும் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அருகில் பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென, தங்காலை தொகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் லக்சிறி கீதாலின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.
7 hours ago
9 hours ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
01 Feb 2026