Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 19 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, மேன்முறையீடு செய்து விடுதலை செய்யப்பட்ட நபரொருவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 13ஆம் திகதி மொரகஹஹேன பிரதேசத்தில் துப்பாக்கி ஒன்றை காட்டி அச்சுறுத்தி, 21,0000 ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளொன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ஒன்று, 9 மி.மி. ரவைகள் 4, கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட நபர் 46 வயதுடைய வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இச்சந்தேகநபர் மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, 19 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில், மேன்முறையீடு செய்யப்பட்ட பின்னர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே விடுதலை செய்யப்பட்டவரென்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த சந்தேகநபருக்கு எதிராக கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் பல வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் இன்றைய தினம் ஹொரனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளாரென்றும் மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3 minute ago
28 minute ago
29 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
28 minute ago
29 minute ago
39 minute ago