2025 ஜூலை 19, சனிக்கிழமை

மட்டக்களப்பில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்,தேவ அச்சுதன்,மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இளைஞர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமீன்மடு பகுதியிலுள்ள புளொக் கல் தயாரிக்கும் வளாகத்தில் அமைந்துள்ள கொட்டிலிலிருந்து இந்த சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, திராய்மடு பகுதியில் வசிக்கும் மேசன் தொழிலாளியான எஸ்.சுமன் (வயது 23) என்பவரின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சடலத்தில்  வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.

பாலமீன்மடு, வேம்படி ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய சுற்று வேலியைச் சேதப்படுத்தியமை தொடர்பில் இந்த இளைஞருக்கும் இன்னும் சிலருக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை இரவு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(படங்கள்: மாணிக்கப்போடி சசிகுமார் )



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X