2025 ஜூலை 19, சனிக்கிழமை

பாலடைந்த கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பாலடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனையடிச்சோலை பகுதியில் உள்ள பாலடைந்த கிணற்றிலிருந்தே இந்தச் சடலத்தை மீட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்தச் சடலத்தை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சடலமாக மீட்கப்பட்ட இந்தப் பெண் கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை கல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X