2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சட்ட விரோதமாக சிகரெட், மதுபானம் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

சட்ட விரோதமாக சிகரெட் மற்றும் மதுபானம் விற்பனை செய்த இருவருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிவான் ரீ.சரவணராஜா தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் பாலமுனை கிராமத்தைச் சேர்ந்த நபரொருவர் தீர்வை செலுத்தப்படாமல் இறக்குமதி செய்யப்பட்ட 17 சிகரட்டுக்களை வைத்திருந்தமைக்காக கடந்த 30ஆம் திகதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நபரை பொலிஸார் திங்கட்கிழமை (2) நீதிமன்றில் ஆஜர்செய்தபோது,  ரூபா 5,400 தண்டப்பணம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

இதேவேளை ஆலையடிவேம்பு பிரதேசத்தின் நாவற்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த நபரொருவருக்கு ரூபா 5,000 தண்டப்பணம் விதித்து நீதவான் ரீ.சரவணராஜா தீர்ப்பளித்தார்.

இந்த நபர் சென்ற முதலாம் திகதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பிணையில் சென்று நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X