2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

40 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

Menaka Mookandi   / 2012 மே 18 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹங்வெல்ல பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த நாட்டு வைத்திய மருந்து நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்து 40 கிலோகிராம் நிறையுடய கஞ்சா போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர்.

சிறு உருண்டைகள் வடிவில் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமாக அஜித் ரோஹன தெரிவித்தார்.

நுகேகொடை குற்றப்பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்படி சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாகவும் இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X