Editorial / 2019 மார்ச் 05 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹரகம- எரவ்வல பிரதேசத்திலுள்ள வர்த்தகர் ஒருவரிடமிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட 7000 மில்லியன் ரூபாய் பெறுமதியான நீல நிற இரத்தினக்கல் நேற்று இரவு பாணந்துறை- கெசல்வத்த பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
களனி விசேட பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, பேலியாகொட பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினரால் இந்த இரத்தினக்கல் மீட்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி, டுபாயில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாக்கந்துர மதுஷின் திட்டத்துக்கமைய, அவரது சகாக்களால் பொலிஸ் சீருடையில் வந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த இரத்தினக்கல்லுடன் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் மதுஷின் நண்பரென்றும், இவரிமிருந்து கைப்பற்றப்பட்ட இரத்தினக்கல் மஹரகமையில் கொள்ளையடிக்கப்பட்ட இரத்தினக்கல்லா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025