2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

கணவனை அடித்துக்கொன்ற மனைவி

Editorial   / 2017 நவம்பர் 12 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவரை பொல்லால் தாக்கி, கொலை செய்துவிட்டு பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 49 வயதான நபரொருவரே  உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பெண்ணின் கணவன் நேற்று(11) இரவு அதிக மதுபோதையுடன் வந்து பொல்லால் அப்பெண்ணை தாக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது, கணவன் கையிலிருந்த பொல்லைப் பறித்து அவ​ரை தாக்கியதில் கணவன் உயிரிழந்துள்ளார். பின்னர் குறித்த பெண் இன்று(12) காலை பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .