Editorial / 2017 ஜூலை 03 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுக்கை, யடவகுர வர்த்தரொருவரின் வீட்டில் கொள்ளையடித்த தங்கக் கடிகாரத்தை, மற்றுமொரு நபருக்கு விற்பனை செய்தபோது, அவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வர்த்தகரின் வீட்டிலிருந்து 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதிலேயே இந்த தங்கக் கடிகாரமும் இருந்துள்ளது. அதனை விற்பனை செய்வதற்கு முயன்ற போதே, 63 வயதான நபரை கைதுசெய்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர், பல்வேறான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு, நீதிமன்றத்தின் ஊடாக சிறையிலடைக்கப்பட்டு, பிணையில் விடுக்கப்பட்டவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கக் கடிகாரத்தை விற்பனை செய்வதற்கு முயன்றபோது, அதில் சந்தேகம் கொண்ட நபர், இந்த விவகாரம் தொடர்பில், பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்தே, பொலிஸார் அவரை கைது செய்து, விசாரணை செய்துள்ளனர்.
அதன்போதே, பாதுக்கையில் உள்ள வர்த்தகரொருவரின் வீட்டில், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் இந்த தங்கக் கடிகாரமும் இருந்ததாகவும் ஏனைய பொருட்களை விற்றுவிட்டதாகவும் பொலிஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
25 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
48 minute ago
1 hours ago