Editorial / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு- கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெளிஹேன வீதியின் ஏத்கால பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றுக்குள், 33 வயதுடைய பெண் ஒருவர், கூரிய ஆயுதங்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (10) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைசெய்யப்பட்ட பெண்ணின் 60 வயதுடைய தாயும் 9 வயதுடைய மகளும் தாக்குதலில் படுகாயமடைந்துள்ள நிலையில், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொலைசெய்யப்பட்ட பெண், தனது தாய், மகளுடன் ஏத்கால பிரதேசத்திலுள்ள தென்னந்தோட்டம் ஒன்றை பராமரிக்கும் பொறுப்பில் இருந்துள்ளனர். அந்த தோட்டத்திலுள்ள சிறிய வீடு ஒன்றில் அவர்கள் வசித்து வந்துள்ள நிலையிலேயே, இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில், கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
16 minute ago
19 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
40 minute ago
1 hours ago