Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 24 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹரகம நகரத்தில், பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் பெண்களின் பிருடத்தை பிளேடால் வெட்டிப் பதம்பார்க்கும் குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
119 ஆம் இலக்க பஸ்ஸுக்காகக் காத்திருந்த ஆறு மாத கர்ப்பிணியின் பிருடத்தை (பின்பகுதி) வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச்சென்றச் ஒருவரை, அங்கிருந்தவர்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், நேற்றுப் புதன்கிழமை காலைவேளையில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த கர்ப்பிணிப் பெண், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய பின்பக்கத்துக்கு ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தெஹிவளையில் உள்ள நிறுவனமொன்றில், உதவி களஞ்சிய நிர்வாகியாகப் பணியாற்றுகின்ற பெண்ணின் பிருடத்தையே அவர் பதம்பார்த்துள்ளார். பிளேடால் வெட்டப்பட்டதும் துடிதுடித்த அந்தப்பெண், அபாயக்குரல் எழுப்பியதையடுத்தே அங்கிருந்தவர்கள், அவரை விரட்டிப்பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர், இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த, 40 வயதானவர் என்றும் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும் அறியமுடிகின்றது.
இதேவேளை, மஹரகம நகரத்தில் வைத்து கடந்த 2ஆம் திகதியன்று, பெண் அறிவிப்பாளர் ஒருவரின் பிருடமும் பிளேடால் பதப்படுத்தப்பட்டது. அதில் அவருக்கு 10 தையல்கள் போடப்பட்டன. இதேவேளை, அன்றைய தினமே, சட்டக்கல்லூரி மாணவியின் பிருடமும் பதம்பார்க்கப்பட்டது. அம்;மாணவிக்கு 9 தையல்கள் போடப்பட்டன. இவ்விரு பெண்களின் பிருடங்களையும் மேற்படி சந்தேகநபரே வெட்டினார் என்று விசாரணைகளிலிருந்து அறியமுடிகிறது. சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அறியமுடிகிறது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago