2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நவநாகரிக சேலை வடிவமைப்புக்கள்...

Menaka Mookandi   / 2012 ஜனவரி 31 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மேனகா இந்திரகுமார்)

தெற்காசியப் பெண்களின் விசேடமாக தமிழ்ப் பெண்களின் மரபுவழி ஆடையாக விளங்கும் சேலை, இன்றைய நவநாகரிக மாற்றத்துக்கு ஏற்ப பல்வேறு பரிணாமங்களை எடுத்துள்ளது.

இயந்திர யுகத்தில் சேலை கட்டிக்கொள்வதற்கு நேரத்தை ஒதுக்கிவிட முடியாது என்று கூறும் பெண்கள், தங்களது பொன் நாளான திருமண நாளின் போது மாத்திரம் அந்த சேலைக்கு கொடுக்கும் மரியாதை தனிப்பட்டதே. கடை கடையாக ஏறி இறங்கி சேலைகளைத் தெரிவு செய்வதற்கென்றே நேர காலத்தை ஒதுக்கிக்கொள்கிறார்கள். 

அந்தவகையில், திருமணங்கள் பல நடந்தேறும் வருடத்தின் இக்காலப்பகுதியில் பெண்களுக்கு தரமான, அவசியமான நவநாகரிக சேலைகளை பெற்றுக்கொள்ள பலரும் முட்டிமோதிக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு அரியதொரு வாய்ப்பினை வழங்கியுள்ளது கம்ஸின்ஸ். திருமணம் உட்பட பல்வேறு நிகழ்வுகளுக்கும் பொருத்தமான சேலைகளை பெற்றுக்கொள்ள பெருமளவு தெரிவு தேவை என்னும்போது கொழும்பிலுள்ள தனித்துவம் வாய்ந்த சேலை வடிவமைப்பு நிறுவனமான கம்ஸின்ஸ் முன்னிலை வகிக்கின்றது.

பெண்களுக்கு தரமான, அவசியமான சேலைகளை விசேடமாக வடிவமைக்கப்பட்ட நவநாகரிக சேலைகளை 5000 ரூபா முதல் பெற்றுக்கொள்ள வெள்ளவத்தையில் அமைந்துள்ள கம்ஸின்ஸ் நிறுவனத்துக்கு வருகை தாருங்கள். (படங்கள் - வருண வன்னியாரச்சி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .