Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kanagaraj / 2016 நவம்பர் 18 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
சபாநாயகரின் அக்கிராசனத்தில் அமர்ந்த மர்மநபர் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, அறிக்கையிடுமாறு சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு கட்டளையிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சபைக்குள் இருக்கின்ற சபாநாயகரின் உத்தியோகபூர்வ ஆசனமாக அக்கிராசனத்தில் யாரோ ஒருவர் அமர்ந்துள்ளார் என்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிடப்பட்;டுள்ளது. இதனையடுத்தே சபாநாயகர் மேற்கண்டவாறு கட்டளையிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம், புதன்கிழமை இரவுவேளையிலேயே இடம்பெற்றுள்ளது. சபையமர்வு புதன்கிழமை இரவு 7 மணியளவில் நிறைவடைந்ததன் அதன் பின்னர், அவைக்குள் துப்பரவு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருந்த போதே, மேற்படி பொறியியலாளர் அக்கிராசனத்தில் அமர்ந்துள்ளதாக அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago