2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

முக்கியமான ஆவணங்களை ‘புலி அழித்தது; சுனாமி சுருட்டியது’

George   / 2017 மே 24 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்களை, சரியான முறையில் அடையாளம் காண முடியவில்லை. அதற்கான ஆவணங்கள் சுனாமி மற்றும் விடுதலை புலிகளின் தாக்குதலினால் அழிவடைந்துவிட்டன” என்று, சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.  

திருகோணமலை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில், 1983ஆம் ஆண்டு முதல், 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், தமிழீழ வி​டுதலைப் புலிகள் அமைப்பினால் அழிக்கப்பட்ட பொலிஸ் நிலையங்கள், கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அழிவுக்குள்ளாக்கப்பட்ட சொத்துகளின் விவரங்கள் தொடர்பில் சபைக்குத் தெரிவிக்குமாறு உதயசாந்த எம்.பி கேள்வியெழுப்பினார்.  

அதற்கு பதிலளித்த அமைச்சர் சாகல ரத்னாயக்க, “குறித்த காலப்பகுதி தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆவணங்கள், 2004ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட சுனாமி அனர்த்தம் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக அழிந்துவிட்டன. அதனால் முழுமையான விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இது குறித்து மேலும் ஆராய்ந்து மேலதிக விவரங்களை தெரிவிக்கின்றேன்” என்றார்.  

இதன்போது, குறுக்கிட்ட பத்ம உதயசாந்த எம்.பி, “அமைச்சரே நீங்கள் வழமையாக இதனைத்தான் சொல்கின்றீர்கள். 30 வருடங்களாக இந்த நாட்டை ஆட்டுவித்த பயங்கரவாத நடவடிக்கையின்போது, நாட்டில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து சரியானத தகவல்களைப் பெற்றுவைத்திருப்பது அவசியம். இதற்கு ஏதாவதொரு நடைமுறையை நீங்கள் பின்பற்றி விவரங்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பீர்களா?” என்றார்.  

அதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர், “இது குறித்து எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .