2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

’புதிய அரசாங்கமொன்றை தெரிவுசெய்யும் அவசியம் ஏற்பட்டுள்ளது’

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை குறித்து பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது.

நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, தற்போதைய அரசாங்கத்துக்கு பதிலாக புதிய அரசாங்கமொன்றை நியமிக்க நாட்டு மக்களுக்கு தற்போது தேவை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
 
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று மற்றும் நாளைய தினங்களில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .