Thipaan / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு ஒரு வருடமாகின்ற போதிலும், இன்னும் அவற்றின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தன, நேற்றுப் புதன்கிழமை சபையில் சுட்டிக்;காட்டினார்.
நாடாளுமன்றத்தில், நேற்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி, இந்த விடயத்தை சபாநாயகரின் அவதானத்துக்குக் கொண்டு வந்த தினேஷ் குணவர்தன எம்.பி, சுயாதீன ஆணைக்குழுக்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஒழுங்குவிதி, அரசியலமைப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில், சுயாதீன ஆணைக்குழுக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காமல், இவ்வாறு செயற்படுவது பாரதூரமானது என்றும் இது தொடர்பான உத்தரவொன்றை சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு வழங்க வேண்டும் என்றும், அரசியலமைப்புப் பேரவையின் தலைவர் என்ற வகையில் சபாநாயகரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
எவ்வாறிருப்பினும், சுயாதீன ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தற்போது தயாராகி வருவதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய இதன்போது தெரிவித்தார்.
இதேநேரம், கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகளாக சுயாதீன ஆணைக்குழுக்கள் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததாக, சபை முதல்வாரன அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, இதன்போது சுட்டிக்காட்;டினார்.
04 Nov 2025
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Nov 2025
04 Nov 2025