Thipaan / 2016 நவம்பர் 24 , பி.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையிலான கூட்டொப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை, முதலாளிமார் சம்மேளனம் மீறுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரிக்கப்படும் என்று, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மற்றும் கமத்தொழில் அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்கள் மீதான வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே, அமைச்சர் திஸாநாயக்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
ஆறுமுகன் தொண்டமானின் இந்தக் குற்றச்சாட்டை, தமது உரையின் போது சுட்டிக்காட்டிப் பேசிய அமைச்சர் நவீன் திஸாநாயக்க, “அந்த சமூகம் தொடர்பான பொறுப்பு, முதலாளிமாருக்கு இருக்கிறது. அதற்கான பொறுப்புடன் அவர்கள் செயற்படவில்லையெனில், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், கூட்டு ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் முதலாளிமாரினால் மீறப்படுவதாக, ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பில் விசாரிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
4 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago