Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Gavitha / 2016 நவம்பர் 22 , பி.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
'ஒவ்வொரு முஸ்லிம் மாணவியினரும் கல்விக்கற்கும் உரிமையை 18 வயது வரையிலும் கல்வியமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும்' என்று ஜே.வி.பி எம்.பியான பிமல் ரத்னாயக்க வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டின் கல்வித்துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்பதாக தெரிவித்த அவர், சகலருக்கும் 18 வயது வரையில் கல்வி என்றக்கொள்கை முக்கியமானது. எனினும், முஸ்லிம் விவாக சட்டத்தின் கீழ், 12 வயது முஸ்லிம் சிறுமிக்கு திருமணம் செய்துவைக்க அனுமதியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) கல்வியமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
'முஸ்லிம் விவாகச் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. முஸ்லிம் பெண் கல்விமான்கள் பலர், முஸ்லிம் விவாக சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டுமென கோரியுள்ளனர். முஸ்லிம்களின் கலாசாரத்தை நான் மதிக்கின்றேன். அவர்களின் மதத்தையும் மதிக்கின்றேன். எனினும், முஸ்லிம் மாணவிகள் தங்களுடைய கல்வி உரிமையை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றேன். முஸ்லிம் பெண்கள் கல்வியில் அபிவிருத்தியடைந்தால் மட்டுமே, முஸ்லிம் கலாசாரத்தை பாதுகாக்க முடியும்' எனவும் அவர் குறிப்பிட்டார்.
'இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்களின் உரிமையை எம்மால் பிரித்துப் பார்க்க முடியாது. அனைத்து மாணவர்களுக்குமான கல்விக் கற்கும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்'என்றும் கேட்டுக்கொண்டார்.
'பொதுவாக பார்த்தால், நாட்டின் கல்வியை மேம்படுத்துவதற்கு இன்னும் பல்வேறான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளையும் மேம்படுத்தவேண்டும். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளவேண்டும்' என்றார்.
'கணிதப் பாடத்தில் சித்தியடையாதோரை உயர்தரத்தில் சேர்ப்பதை நாங்கள் எதிர்க்கின்றோம். கணிதம் என்பது தனியொரு பாடமல்ல. அது சகல பாடங்களுக்குள்ளும் வருகின்ற பொதுவான பாடமாகும். ஆகவே, இந்த விடயத்தில் கூடுதல் கவனம்செலுத்தவேண்டிய தேவை, கல்வியமைச்சுக்கு இருக்கின்றது' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
12 minute ago
33 minute ago