2025 மே 15, வியாழக்கிழமை

‘அக்கிராசனம்’ சரிந்து விழுந்தது

Kogilavani   / 2017 பெப்ரவரி 10 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில், சபைக்குள் இருக்கின்ற சபாநாயகரின் ஆசனமான அக்கிராசனம், பின்பக்கமாக சரிந்து விழுந்த சம்பவமொன்று, நேற்று (09) இடம்பெற்றது.   

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கிகரிப்பது குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.   

ஒரு சந்தர்ப்பத்தில், ஆனந்த குமாரசிறி எம்.பி, சபைக்குத் தலைமை தாங்கிய கொண்டிருந்தார். அப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான ஸ்ரீநேசன் உரையாற்றிக்கொண்டிருந்தார். சபைக்கு தலைமைதாங்கிக் கொண்டிருந்த உறுப்பினருக்கான நேரம் நிறைவடைந்ததும். அடுத்ததாக, ஷெஹான் சேமசிங்க எம்.பிக்கு, சபைக்கு தலைமைதாங்குவதற்காக அக்கிராசனத்துக்கு அருகில் வந்திருந்தார்.   

இருவரும் ஒருவருக்கு ஒருவர் வழிவிடுவதற்கு முயற்சித்த போதே, அக்கிராசனம் பின்பக்கமாக சரிந்து விழுந்துவிட்டது. உடனடியாக ஓடோடி வந்த, சபை உதவியாளர்கள் ஆசனத்தை நிமிர்த்தி வைத்தனர்.   

அதன் பின்னர் ஷெஹான் சேமசிங்க, அக்கிராசனத்தில் அமர்ந்து சபைக்கு தலைமைதாங்கி வழிநடத்தினார்.   

இதேவேளை, பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை கிளப்பிய, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான மஹிந்தானந்த அளுத்கமகே, நாடாளுமன்ற வரலாற்றிலே, அக்கிராசனம் சரிந்து விழுந்தமை இதுவே முதல்தடவையாகும். அக்கிராசனம் சரிந்தது நல்ல சகுணமல்ல. அரசாங்கத்தின் பயணத்துக்கும் இது நல்லதல்ல என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .