George / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
ஊடகவியலாளர் கீத் நொயர் மீதான தாக்குதல் தொடர்பில், இராணுவப் புலனாய்வுத் துறையினர் காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் வீமல் வீரவன்ச, நாடாளுமன்றத்தில் நேற்று (23) விசனம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போதே, விமல், மேற்கண்டவாறு விசனம் தெரிவித்தார்.
முன்னதாக கேள்வியெழுப்பிய விமல், “ஊடகவியலாளர் கீத் நொயர் மீதான தாக்குதல் தொடர்பில் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ தினம் இந்த இராணுவ வீரர்கள், தெஹிவளைப் பகுதியில் நடமாடியமையே இவர்களைக் கைது செய்வதற்குக் காரணமாகவும் அமைந்துள்ளது.
இந்த இராணுவ அதிகாரிகளின் புகைப்படங்கள் கீத் நொயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நாட்டுக்குத் தம்மை அர்ப்பணித்த புலனாய்வுத் துறையினர் காட்டிக் கொடுக்கப்படுகின்றனர்” என்றார்.
4 hours ago
29 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
29 Dec 2025