2025 மே 16, வெள்ளிக்கிழமை

'டில்ருக்ஷிக்குப் பின்னர் எம்.பிக்களின் சம்பளம் பற்றிப் பேச்சு'

Thipaan   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம், ஊழல் தொடர்பான சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவி டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க உட்பட, சுயாதீனக் குழுக்களின்  தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோரின் சம்பளம் தொடர்பான அறிவிப்பைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அளவீடு தொடர்பாகவே கதைக்கப்படவிருப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், இவ்விவகாரம், உடனடியாகவே கணக்கிலெடுக்கப்படாது என, பிரதமர் ரணில், நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றுத் தெரிவித்தார்.

'இவ்விவகாரத்தைப் பற்றி நாங்கள் இப்போது கதைக்க மாட்மோம். அது தொடர்பாகப் பின்னர் கதைப்போம்' என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் ரணில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, ஒன்றிணைந்த எதிரணியினர், கூச்சல்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில், நாட்டின் நல்லாட்சிக்காக அவ்வாறான ஆணைக்குழுக்களை அரசாங்கம் உருவாக்கியுள்ள நிலையில், தற்போது கூச்சலிடுபவர்கள், அது தொடர்பில் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .