Thipaan / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
“2020ஆம் ஆண்டு நடைபெற்றவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்டால் சந்தேகத்துக்கு இடமின்றித் தோல்வி அடைவார்” என, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
புஹதஹேவாஹெட்டவில், அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைவார். எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கே வெற்றிபெற வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டு எதிரணியினர், தனித்துப் போட்டியிடப் போகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினாலும், அத்தேர்தலில் கூட்டு எதிரணி, போட்டியிடப் போவதில்லை" எனக் கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷவைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர் என்ற காரணத்தினால், கூட்டு எதிரணியினர் போட்டியிடப் போவதில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து, தேவையான சந்தர்ப்பத்தில் அமைச்சரவை மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
57 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
3 hours ago
5 hours ago