2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

‘நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு தீய சக்திகள் சூழ்ச்சி’

Kogilavani   / 2016 நவம்பர் 17 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன மற்றும் மதவாத சக்திகள் நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு சூழ்ச்சி செய்கின்றமை, நாட்டில் தற்போது இடம்பெறுகின்ற சம்பவங்களிலிருந்து புலனாகிறது என்று சுட்டிக்காட்டிய அரசாங்கம், இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் கூடிய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.  

நாடாளுமன்றத்தில், நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

நல்லாட்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நாட்டில், மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்குச் சில தீய சக்திகள் முயல்கின்றன. நாட்டில் அண்மைகாலமாக இடம்பெற்ற சம்பவங்களை பார்க்கின்ற போது, புலனாகின்றது. இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடனேயே இருக்கிறது என்றும் அவர் கூறினார்.  

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதுடன் நல்லிணக்கத்துக்கு தீங்கு ஏற்படாத வகையில் சகலரும் செயற்படவேண்டும். விசேடமாக ஊடகங்கள் அறிக்கையிடும் போது தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தேசிய பொறுப்புடன் செயற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .