Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 மார்ச் 09 , பி.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.எ.ஜோர்ஜ்
“ஒன்றிணைந்த எதிரணியின் தலைவரான தினேஷ் குணவர்தன எம்.பியை, அழைத்துச் செல்வதற்காக பொலிஸார், சபைக்குள் புதன்கிழமையன்று (08) நுழைந்த வழி தவறானது” என்று, அக்கட்சியின் மற்றுமொரு எம்.பியான வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.
ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய வாசுதேவ எம்.பி, “உறுப்பினர்கள், சபைக்குள் நுழையும் கதவுகளின் ஊடாகவே, பொலிஸார் அவைக்குள் பிரவேசித்தனர். இது தவறானது. பிரதான நுழைவாயிலின் ஊடாகவே, பொலிஸார் வந்திருக்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலளித்த சபாநாயகர், “ சபைக்குள், பொலிஸார் எவ்வாறு நுழைந்தனர்கள் என்பதைத் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .