2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

உண்ணாவிரதப் பட்டதாரி

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, உண்ணாவிரதமிருப்பதில் ஒரு பட்டதாரி என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் விமலின் பொக்கற்றில் லெமன் பஃப் பிஸ்கட் உள்ளதா என, சிறைச்சாலை அதிகாரிகள் ஆராய வேண்டும் என, நகைச்சுவையாகக் கூறினார்.

நாடாளுமன்றில் நேற்று (22) இடம்பெற்ற இலஞ்சம்  மற்றும் ஊழல் பற்றி சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“விமல் எம்.பி. தற்போது சிறையில் உண்ணாவிரதம் இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. அவர் எவ்வாறான உண்ணாவிரதத்தை மேற்கொள்வார் என்பதற்கு, அவர் தும்முல்லையில் செய்த உண்ணாவிரதமே சிறந்த உதாரணமாகும்.

உண்ணாவிரதம் என்று கூறி, பொக்கற்றில் வைத்து லெமன் பஃப் பிஸ்கட்டை அவர் அப்போது சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

தற்போது சிறையிலும் அவரின் பொக்கற்றில் லெமன் பஃப்  பிஸ்கட் இருக்கின்றதா என அதிகாரிகள் ஆராயவேண்டும். நாடாளுமன்றத்துக்கு வந்தாலும்,  பீதுருதாலகால மலை போல காலைச் சாப்பாட்டையும் பின்னர் சமனல மலை போல, மதிய உணவையும் நக்கிள்ஸ் மலை போல இரவு உணவையும் தான் விமல் உண்பார்.

இப்படியானவர் தான், தற்போது உண்ணாவிரதமிருக்கிறாராம். மேலும், தமது தலைவரே உண்ணாவிரதமிருக்கும்போது,  தேசிய சுதந்திர முன்னணியின் ஏனைய உறுப்பினர்களும் உண்ணாமல் தானே இருக்கவேண்டும். ஆனால், இவர்களோ நாடாளுமன்றில் நன்றாகச் சாப்பிடுகிறார்கள்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .