Thipaan / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ள சில அமைச்சர்களினதும் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களதும் பெயர்களடங்கிய விவரமொன்றை, இலஞ்சம், ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாக, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான தீர்மானம் தொடர்பிலான விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற போதே, பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
'இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள், ஹன்சார்ட்டிலிருந்து நீக்கப்படுமென்ற போதிலும், நான் அவர்களை பெயரிடுவேன். ஹன்சார்ட்டிலிருந்து அவர்களது பெயர்களை நீக்குவதால் மாத்திரம், மக்களை அது சென்றடைவதைத் தடுக்க முடியாது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாடகைக் கார்களின் நாடாளுமன்றத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது ஹெலிகொப்டர்களையும் டுபாயில் வீடுகளையும் கொண்டிருக்கிறார்கள்' என்று தெரிவித்ததோடு, சில உறுப்பினர்கள், அவுஸ்திரேலியாவில் அப்பிள் பழத்தோட்டங்களை வைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஆணைக்குழு முன்னால் ஒன்றுகூடும் ஊடகவியலாளர்கள், அவதானமாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்த பிரதியமைச்சர், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவ்வாணைக்குழுவின் பின் கதவால் தப்பியோடுவதாகக் குறிப்பிட்டார்.
4 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago