2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

எம்.பிக்களின் கொடுப்பனவை அதிகரிக்கவேண்டும்:பிரதமர்

Kanagaraj   / 2016 நவம்பர் 19 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தையும் அதன் செயற்பாடுகளையும் பலப்படுத்தவேண்டுமாயின், எம்.பிக்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்கவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற, வரவு-செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான், கொழும்பில் இருப்பதனால் எனக்கு பிரச்சினையிருக்கவில்லை. ஆனால், வெளிமாவட்டங்களில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை தீர்க்கவேண்டும். அதற்கான எம்.பிகளுக்கான கொடுப்பனவை அதிகரிக்கவேண்டும் என்றும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .