2025 மே 15, வியாழக்கிழமை

சித்தியெய்தாதோரை காட்டிக்கொடுப்பேன்: சாள்ஸ் எம்.பி

Thipaan   / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றாதவர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பிலான விவரங்களைச் சமர்ப்பிப்பேன்” என்று, தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவிக்க, “அவை தொடர்பில் விவரங்களை தந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்” என்று சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.  

நாடாளுமன்றத்தில், நேற்று (07) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, “அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்யாத ஆட்கள் முறைசார்ந்த ஆட்சேர்ப்பு நடைமுறையின்றி, வன்னி மாவட்டத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக ஆட்சேர்க்கப்பட்டுள்ளனாரா?” உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருந்தார்.  

கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, “2012ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமையவே, அமைச்சரவையின் அனுமதியுடன், க.பொ.த.(சா/த) பரீட்சையில், கணிதம், தாய்மொழி உள்ளிட்ட 5 பாடங்களில் சித்தியெய்தியவர்கள், நேர்முகப் பரீட்சைக்கு பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்” என்றார்.  

குறுக்கு கேள்வியை எழுப்பிய சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, “கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சையில் தோற்றாதவர்களுக்கு கூட இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறானவர்கள் தொடர்பிலான தகவல்கள் என்னிடம் இருக்கின்றன” என்றார்.  

கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் எஸ்.பி., “தகைமைகளின்றி சமுர்த்தி உத்தியோகத்தர்களாக ஆட்சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பேன்” என்றார்.  

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 23 கிராமசேவகர் பிரிவுகளிலும் சமுர்த்தி பயன்பெறவேண்டிய பலர் இருக்கின்ற போதிலும், ஒருவருக்கேனும் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .