2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

சிலர்மீது பாய்ந்தார் டக்ளஸ்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

வடக்கு மக்களின் காணிப்பிரச்சினையை வைத்து சிலர் சுயலாப அரசியலில் ஈடுபடுகின்றனர். காணியற்ற மக்களின் பிரச்சினையைத் தீர்க்க, அரசாங்கம் முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி அமைச்சின் கட்டளைச் சட்டங்களின் கீழான கட்டளைகளை அங்கிகரிப்பதற்கான

பிரேரணைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 “வலி. வடக்கு பிரதேசத்தில் பொது மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்பதாமல் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.  

மக்களின் காணிப்பிரச்சினையை வைத்து சிலர் சுயலாப அரசியலை நடத்திச் செல்கின்றனர். அவர்கள் இதனை விடுத்த மக்களின் காணிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கேப்பாபுலவு, பிளவுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் 229 குடும்பங்களுக்குச் சொந்தமான 665 ஏக்கர் காணி இன்னும் படையினரின் வசம் உள்ளது. அதனை விடுவிக்க அரசாங்கம் முன்வர வேண்டும். 

மக்களின் காணிகளைப் பெற்றுக்கொடுக்க காணிக்கச்சேரிகளை நடத்துமாறு நான் தொடரந்து கோரிக்கை விடுத்து வருகின்றேன். தமது சொத்துகளை உறுதிப்படுத்த, அடையாளம் காண முடியாத மக்களும் உள்ளனர். காணி, சொத்து ஆவணங்கள் சேதமடைந்த, அழிவடைந்த நிலையிலும் மக்கள் உள்ளனர். அவர்களுடைய காணிகளைப் பெற்றுக்கொடுக்க உரிய வழிமுறையை உருவாக்க வேண்டும். 

பலருடைய காணிகளின் மற்றவர்கள் உள்ளனர், விவசாய நிலங்களின் வேறு பயிர்ச்செய்கை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .