Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது மியான்டாட் விளையாட்டுக் கழகத்தின் எப்.எஸ்.கே மியான்டாட் பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், போலிலயன்ஸ் சம்பியனானது.
சாய்ந்தமருது பொலிவேரியன் ஹிஜ்ரா மைதானத்தில் நேற்று நடைபெற்ற மாளிகா ஜூனைட்டெட்டுடனான இறுதிப் போட்டியில் வென்றே போலிலயன்ஸ் சம்பியனானது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மாளிகா ஜூனைட்டெட், முதலில் துடுப்பெடுத்தாடி 10 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 126 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய போலிலயன்ஸ்ஸின் ஆரம்ப வீரர்கள் சிறப்பாக துடுபெடுத்தாடினாலும், பின்னர் விக்கெட்டுக்கள் சரிந்து கொண்டே இருந்தது. இறுதியில், 9.4 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் போலிலயன்ஸ் வெற்றியிலக்கையடைந்தது.
இறுதிப் போட்டியின் நாயகனாக போலிலயன்ஸின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஏ.கே.எம். பஸாலும், தொடரின் நாயகனாக முஹம்மட் றிஸ்னியும் தெரிவாகினர்.
இத்தொடரின் மூன்றாமிடத்தை மருதூர் வொரியர்ஸும், நான்காமிடத்தை சாந்தம் சலேஞ்சர்ஸும் பெற்றுக் கொண்டன.
4 minute ago
8 minute ago
12 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
12 minute ago
21 minute ago