Editorial / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான டி -20 உலக கிண்ண போட்டிகளுக்கான பயிற்சி போட்டியில் இலங்கை மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை தோற்கடித்து அபார வெற்றியீட்டியது.
போட்டியில் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கட் இழப்புக்கு 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன் போது சிசிகலா வீரரத்ன 4 விக்கெட்டுக்களையும், அணித் தலைவி சமரி அத்தபத்து 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
அதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் சிறப்பாட்டத்தை வெளிப்படுத்தி சமரி அத்தபத்து 50 பந்துகளில் 6 சிக்கஸ்ர்கள் உள்ளடங்களாக 78 ஓட்டங்களையும், அசினி மதுஷிகா 29 ஓட்ஙட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டனர்.
அதன்படி 12.3 ஓவர்களில் 123 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி வெற்றி இலக்கை அடைந்தது. இதற்கு முன்பாக இவ்விரு அணிகளும் மோதிக்கொண்ட 4 போடடிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
45 minute ago
51 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
51 minute ago
3 hours ago