Editorial / 2020 ஏப்ரல் 12 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூகப் பொறுப்பு வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனமான Rakuten Viber, தமிழ், சிங்கள புதுவருடத்தில் அனைவருக்கும் தமது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் சமூகத்தாருடன் இணைந்திருப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
COVID-19 பரவலைத் தொடர்ந்து பல புதிய உள்ளம்சங்களை அறிமுகம் செய்திருந்ததை தொடர்ந்து, நாட்டின் மாபெரும் கொண்டாட்டங்களில் ஒன்றான தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு மக்களுக்கு தமது வீடுகளிலிருந்தவாறே கொண்டாடும் வகையில் புதிய உள்ளம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
COVID-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கமைய, இந்த புதுவருடப் பிறப்பில் பலர் சமூக தூரப்படுத்தலை பின்பற்ற வேண்டிய நிலையை எதிர்கொண்டுள்ளனர். எனவே, தமது அன்புக்குரியவர்களுடன் இணைந்திருப்பது, வாழ்த்துகளை தெரிவிப்பது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
தமது வீடுகளிலிருந்தவாறே இலங்கையர்களுக்கு ‘Srilanka New Year Bot’ இன் உதவியுடன் சகலருடனும் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளலாம். புதுவருடத்தை குறிக்கும் விசேட ஸ்டிக்கர்கள், பொலரைட் ஃபிரேம்கள் மற்றும் கவர்ச்சிகரமான கார்ட் வகைகள் போன்றன வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளும் வகையில் உள்ளடங்கியுள்ளன.
வாழ்த்துத் தெரிவிப்பதை மேலும் களிப்பூட்டும் வகையில், Viber இனால், සුභ අලුත් අවුරුද්දක් වේවා , புத்தாண்டு வாழ்த்துக்கள் போன்ற வாழ்த்துத் தெரிவிக்கும் சொற்பதங்களை பயன்படுத்தும் போது, திரையில் அனிமேஷன் சொற்கள் உள்ளடங்கியுள்ளன.
சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவமளித்து APAC இன் வியாபார அபிவிருத்தி சிரேஷ்ட பணிப்பாளரான அனுபவ் நாயர் கருத்துத் தெரிவிக்கையில், ”COVID 19 பரவும் சூழலில், சமூக தூரப்படுத்தல் தொடர்பில் மக்கள் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். குறிப்பாக பண்டிகை காலப்பகுதியில் இது பெருமளவில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த தினம் தொடர்பில் நிறுவனம் எனும் வகையில் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, இலங்கையின் மக்களை தமது வீடுகளிலிருந்தவாறே தமது அன்புக்குரியவர்களுடன் இணைப்பில் வைத்திருப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
இந்த உள்ளம்சங்கள் இந்தப் பண்டிகைக் காலத்தில் அவர்களின் வாழ்வில் களிப்பை ஏற்படுத்தும் என்பதுடன், வீட்டிலிருந்தவாறே வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி கொண்டாட வழிகோலுவதாக அமைந்திருக்கும்.” என்றார்.
இலங்கை வாழ் மக்களை வீடுகளில் இருக்குமாறு தூண்டும் #stayathome என்பதை தனது உத்தியோகபூர்வ கணக்கில் பதிவு செய்துள்ளது.
பல தனியார் நிறுவனங்கள் COVID-19 இடர் காலப்பகுதியில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலையில், மக்கள் சமூகத்துடன் இணைந்திருப்பதற்கான வினைத்திறன் வாய்ந்த வழிமுறைகளை இனங்கண்ட வண்ணமுள்ளனர்.
இந்த வருடத்தில் புதுவருடப் பிறப்பு கொண்டாட்டம் புதிய வழிமுறையில் அனுஷ்டிக்கப்பட வேண்டியிருக்கும். ஆனாலும் Viber ஊடாக மக்கள் பொறுப்பாகவும், அன்புக்குரியவர்களுடன் இணைப்பிலிருந்த வண்ணமும் கொண்டாடி மகிழக்கூடியதாக இருக்கும்.
7 hours ago
8 hours ago
05 Dec 2025
05 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
05 Dec 2025
05 Dec 2025