Editorial / 2020 ஜூன் 09 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேஷம்: இன்று எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். பொறுப்புகள் கூடும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். மனதில் உற்சாகம் ஏற்படும்.
ரிஷபம்: இன்று வீண் பகை உண்டாகலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது.
மிதுனம்: இன்று தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. கூடுதல் உழைப்பும் இருக்கும்.
கடகம்: இன்று குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும்.
சிம்மம்: இன்று சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை.
கன்னி: இன்று எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக் கும். வாக்கு வன்மை அதிகரிக்கும்.
துலாம்: இன்று தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள்.
விருச்சிகம்: இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள்.
தனுசு: இன்று திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும். வீண் செலவு ஏற்படும்.
மகரம்: இன்று மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்: இன்று எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
மீனம்: இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை. கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
3 hours ago
4 hours ago
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
16 May 2026
16 May 2026