Janu / 2026 மே 12 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகிய இருவரும் பல வருடங்களுக்குப் பின் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். ஓரிரு மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த புதிய படத்தில் ஹீரோ ரஜினியா? அல்லது கமலா? என ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்கப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 22 ஆண்டுகளுக்கு மேலாகக் கதாநாயகியாகக் கோலோச்சி வரும் திரிஷா தான் இப்படத்தில் நடிக்கப் போகிறாராம். இதுசம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago