Freelancer / 2023 ஜூலை 12 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விஜய் நேற்று பனையூர் விஜய் மக்கள் நல இயக்க அலுவகத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதற்காக நீலாங்கரையில் இருந்து பனையூருக்கு விஜய் காரில் சென்றார். அப்போது அக்கரை பகுதி சிக்னலில் நடிகர் விஜயின் கார் நிற்காமல் சென்றது வீடியோ காமிராவில் பதிவானது.
இதையடுத்து, போக்குவரத்து பொலிஸார் நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். சிக்னலை மதிக்காமல் விஜயின் கார் சென்றதாக புகார் எழுந்த நிலையில், போக்குவரத்து பொலிஸார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் போக்குவரத்து விதிமீறலுக்கான ரூ.500 அபராத தொகையை நடிகர் விஜய், ஆன்லைன் மூலம் செலுத்தினார்.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago