2025 ஒக்டோபர் 27, திங்கட்கிழமை

”ஆண்கள் எல்லோரும் பாவம் என்று சொல்ல மாட்டேன்”

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 27 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரியோராஜ் - மாளவிகா மனோஜ் நடிப்பில் தயாராகியுள்ள `ஆண் பாவம் பொல்லாதது' படம் வருகிற 31 ஆம் திகதி திரைக்கு வருகிறது.

இதையொட்டி நடந்த படத்தின் புரமோஷன் விழாவில், மாளவிகா மனோஜ் பேசியபோது, " ரியோராஜ் ஜோடியாக மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. இது ஆண்களின் பக்கம் நின்று பேசும் கதை என்றாலும், பெண்களுக்கும் சில தேவையான தகவல்களை இந்த கதை சொல்லும். அதனால்தான் இந்த கதையை ரசித்து செய்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை ஆண்கள் எல்லோரும் பாவம் என்று சொல்ல மாட்டேன்.

ஒரு சில ஆண்களை மட்டும் வேண்டுமென்றால் பாவம் என்று சொல்லலாம். மற்றபடி இன்றைய தலை முறைக்கு தேவையான பல சுவாரஸ்ய தகவல்கள் படத்தில் உள்ளன. ரசிப்புக்கு குறைவு இருக்காது", இவ்வாறு அவர் பேசினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .