R.Tharaniya / 2025 ஜூன் 02 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘மதயானை கூட்டம்’, ‘ராவண கோட்டம்’ படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்.
இவர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விக்ரம் சுகுமாரன். 'ஆடுகளம்' படத்தில் வெற்றிமாறனுக்கு துணையாக இருந்தார். ஆடுகளம் வெற்றிக்கு விக்ரம் சுகுமாரன் பெரிய காரணம் என பல பேட்டிகளில் வெற்றிமாறன் கூறியிருப்பார்.
அதனை தொடர்ந்து, 'மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் விக்ரம் சுகுமாரன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின், 6 ஆண்டுகள் கழித்து நடிகர் சாந்தனுவை வைத்து 'ராவணக்கோட்டம்' என்ற படத்தை இயக்கினார்.
இந்த நிலையில், நேற்று மதுரைக்குச் சென்று தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த படத்துக்கான கதையை சொல்லிவிட்டு பேருந்தில் ஊர் திரும்பும் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago